Home நாடு மஇகா பதவிகளில் இருந்து சந்திரசேகர் சுப்பையா விலகினார்

மஇகா பதவிகளில் இருந்து சந்திரசேகர் சுப்பையா விலகினார்

2031
0
SHARE
Ad
சந்திரசேகர் சுப்பையா

கோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதியின் தலைவர் டத்தோ சந்திரசேகர் சுப்பையா கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தான் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் 1 ஜூன் 2018 தேதியிட்ட தனது பதவி விலகல் கடிதத்தை அவர் வெளியிட்டார். பின்னர் செல்லியல் ஊடகம் அவரைத் தொடர்பு கொண்டபோது தான் பதவி விலகியதை உறுதிப்படுத்தியதோடு, தனது பதவி விலகல் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் கூறினார்.

மஇகா பண்டார் தாசெக் செலாத்தான் கிளையின் தலைவருமான சந்திரசேகர் சுப்பையா நீண்ட காலமாக மஇகாவில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அவரது தந்தை மறைந்த திரு சுப்பையாவும் நீண்ட காலமாக மஇகா கிளைத் தலைவராக இருந்ததோடு, மஇகாவின் அன்றைய தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி 1980-ஆம் ஆண்டில் மஇகாவில் நுழைந்த சந்திரசேகர் சுப்பையா மஇகா தொகுதித் தலைவராகவும் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

மூன்றாண்டுகள் கொண்ட ஒரு தவணைக்கு அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) பதவி வகித்துள்ளார்.

இரண்டு தவணைகளுக்கு மத்திய செயலவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

தனது பதவி விலகலுக்கான காரணங்கள் எதையும் சந்திரசேகர் சுப்பையா தனது கடிதத்தில் குறிப்பிடவில்லை.