Home நாடு 10 இலட்சம் ரொக்கத்துடன் 2 காவல் துறை அதிகாரிகள் கைது

10 இலட்சம் ரொக்கத்துடன் 2 காவல் துறை அதிகாரிகள் கைது

1234
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – ஊழல் தடுப்பு ஆணையம் காவல் துறையின் 2 உயர் அதிகாரிகளை வியாழக்கிழமை (மே 31) அன்று கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறது.

துணை ஆணையர் (அசிஸ்டெண்ட் கமிஷனர்) மற்றும் துணை கண்காணிப்பாளர் (அசிஸ்டெண்ட் சூப்பரிண்டென்டன்) ஆகிய பதவிகளைக் கொண்ட அந்த இரண்டு அதிகாரிகளும் விபச்சாரம்,சூதாட்டம், குண்டர் கும்பல் ஆகியவற்றுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வியாழக்கிழமை பிற்பகலில் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டதில் சுமார் 4 இலட்சம் முதல் 7 இலட்சம் வரையிலான ரொக்கம் கைப்பற்றப்பட்டது என ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பின்னர் அந்தக் காவல் அதிகாரிகள் அவர்களின் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 225,000 ரிங்கிட் ரொக்கம் அசிஸ்டெண்ட் கமிஷனரின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது. இதே போன்று ரொக்கப் பணம் அசிஸ்டெண்ட் சூப்பரிண்டென்டன் அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்டது.