Home நாடு “இந்தியர் புளுபிரிண்ட் மறு ஆய்வு செய்யப்படும்”-குலா

“இந்தியர் புளுபிரிண்ட் மறு ஆய்வு செய்யப்படும்”-குலா

980
0
SHARE
Ad
தமிழ் அறவாரியம் ஆண்டுக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் குலசேகரன்

ஷா ஆலாம் – தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது கொண்டுவரப்பட்ட மலேசிய இந்திய புளுபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான பத்தாண்டு கால பெருவியூகத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்தார்.

இன்று சனிக்கிழமை (ஜூன் 2) ஷா ஆலாமில் தமிழ் அறவாரியத்தின் 2018/2019 ஆண்டுக் கூட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தை பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் மறு ஆய்வு செய்யும். புளுபிரிண்ட் திட்டத்தின் பின்னணியில் பிரமாதமாக ஒன்றுமில்லை. அதில் காணப்படும் சில அம்சங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி அன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகாவின் முயற்சியின் காரணமாக மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் திட்டம் அறிமுகம் கண்டது.