மேலும் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் கலந்துக் கொண்டு, அவர்களின் கல்வியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் செய்ய செயல்திட்டங்களை வழிவகுக்க வேண்டும் என்று ரவி முனுசாமி கூறினார். தொடர்ந்து சிறப்பான முறையில் போட்டிகளை ஏற்பாடு செய்த கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, ஸ்கேரேட்ஸ் போட்டிகள் நடப்பட்டு மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, பின்னர் தேசிய நிலையிலான போட்டியில் அந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.
தேசிய நிலையிலான . தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் உள்ள IPPP-யில் நடைபெறும்.
நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்:
எண் | மாணவர் பெயர் | பள்ளியின் பெயர் |
1 | Jithendrra P.Ganesen | (SJKT Senawang) |
2 | Tarvind Ravi | (SJKT Spring hill) |
3 | Kashika Nair sugunan | (SJKT LDG Seremban) |
4 | Theerthanah Muthu raman | (SJKT Bahau) |
5 | Prithikhaa Mohanthasan | (SJKT Senawang) |
6 | Vaisnavy Saravana kumar | (SJKT Tampin) |
7 | Dhanarubiny Balamurugan | (SJKT Rantau) |
8 | Darvin Samynathan | (SJKT Seremban) |
9 | Tejashri Mukunthan | (SJKT Senawang) |
10 | Parinita Muralitharan | (SJKT Sungai Salak) |
மேற்காணும் பட்டியல் மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 10 நிலை வெற்றியாளர்களைக் கொண்டதாகும். இம்மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.