Home வணிகம்/தொழில் நுட்பம் அஸ்ட்ரோவுக்குப் புதிய தலைமைச் செயல் அதிகாரி – ஹென்ரி டான்

அஸ்ட்ரோவுக்குப் புதிய தலைமைச் செயல் அதிகாரி – ஹென்ரி டான்

1306
0
SHARE
Ad
ஹென்ரி டான்

கோலாலம்பூர் – புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் பல்வேறு முன்னணி வணிக குழுமங்களின் நிர்வாக அளவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அஸ்ட்ரோ நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி ரோஹானா ரோசன் பதவி விலகுகிறார்.

அவரது பதவி விலகல் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 31 முதல் அமுலுக்கு வரும். இருப்பினும் அவர் தொடர்ந்து அஸ்ட்ரோ இயக்குநர் வாரியத்தில் நிர்வாக அதிகாரமற்ற இயக்குநராகத் தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்.

ரோஹானா ரோசன்

அஸ்ட்ரோவில் தற்போது உள்ளடக்கம் மற்றும் பயனீட்டாளர் பிரிவின் (Group chief content & consumer officer) தலைவராக இருக்கும் ஹென்ரி டான் ரோஹானாவுக்குப் பதிலாக தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்பார்.

#TamilSchoolmychoice

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஹென்ரி டான் அஸ்ட்ரோவில் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறார்.

ரோஹானாவின் தலைமையின் கீழ் அஸ்ட்ரோவின் பயனீட்டாளர் எண்ணிக்கை 2 மில்லியனிலிருந்து 5.5 மில்லியனாக உயர்ந்தது. அந்நிறுவனத்தின் வருமானம் 1.79 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து அதிகரித்து 31 ஜனவரி 2018 நாள் முடிந்த நிதி ஆண்டில் 5.53 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தது.