Home நாடு மகாதீரைத் தொடர்பு கொண்ட ஜோ லோ!

மகாதீரைத் தொடர்பு கொண்ட ஜோ லோ!

994
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தலைமறைவாகி இருக்கும் வணிகர் ஜோ லோ, 14-வது பொதுத் தேர்தல் முடிவடைந்து துன் மகாதீர் பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே  அவருக்கு நெருக்கமான தரப்புகளின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு 1எம்டிபி விவகாரங்களில் ஒத்துழைக்க முன்வந்ததாக மலேசியாகினியின் பிரத்தியேகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

இதைத் தொடர்ந்துதான் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் துன் மகாதீர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது  “ஜோ லோ எங்கிருக்கிறார் என்பது எங்களுக்கு ஏறத்தாழ தெரியும்” எனக் கூறியிருந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மகாதீர் “ஜோ லோ எந்த நாட்டில் இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை மலேசியாவுடன் கொண்டிருக்காத ஒரு நாட்டில் தற்போது இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஜோ லோ மீதான குற்றப் புலனாய்வு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள அரசாங்கம், ஜோ லோவைக் கைது செய்வதற்கான ஆணை ஒன்றையும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூலமாகப் பிறப்பித்துள்ளது.

1எம்டிபி தொடர்பில் மேலும் பலர் மீது கைது ஆணைகளை ஊழல் தடுப்பு ஆணையம் பிறப்பித்துள்ளது.

சிங்கப்பூரும் ஜோ லோவைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சிங்கப்பூரின் கோரிக்கையைத் தொடர்ந்து ஜோ லோவை தற்போது தேடப்படும் குற்றவாளிகளுக்கான சிவப்பு நிற அபாயப் பட்டியலில் இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை சேர்த்துள்ளது.