Home நாடு எந்தப் பதவிக்கும் போட்டியில்லை – ஹிஷாமுடின் முடிவு

எந்தப் பதவிக்கும் போட்டியில்லை – ஹிஷாமுடின் முடிவு

1162
0
SHARE
Ad
ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

கோலாலம்பூர் – எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அம்னோவின் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை வகித்து வரும் ஹிஷாமுடின் அம்னோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அதே சமயம், முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஒன்றுவிட்ட சகோதரரான ஹிஷாமுடின் எல்லா விவகாரங்களிலும் நஜிப்பிற்கு காட்டிய நெருக்கம், விசுவாசம் ஆகியவை காரணமாக கட்சியில் அவருக்கான ஆதரவும், செல்வாக்கும் பெருமளவில் சரிந்திருப்பதாகவும், கட்சித் தேர்தலில் நின்றாலும் அவருக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில்தான் ஹிஷாமுடின் தானாகவே முன்வந்து அம்னோவில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்.