Home நாடு காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்

காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்

2100
0
SHARE
Ad
டத்தோ ஏ.காடிர் ஜாசின்

கோலாலம்பூர் – மாமன்னர் குறித்து கருத்துகள் தெரிவித்ததற்காக சர்ச்சையில் சிக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.காடிர் ஜாசின், அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் சார்பான ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

மான்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து, சுல்தான் மாஹ்முட்டுக்கு, கடந்த 16 மாதங்களாக அவருக்காக செலவிடப்பட்ட தொகை 256.9 மில்லியன் என காடிர் ஜாசின் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

காடிர் ஜாசின் தனது வலைப் பதிவில், “அரசாங்கம் அரச தரப்பை நல்ல முறையில்தான் கவனித்துக் கொள்கிறது. அதனால்தான் மாமன்னருக்கு மொத்தம் 256.9 மில்லியன் ரிங்கிட் கடந்த 16 மாதங்களில் ஆடம்பரமான அளவில் செலவிடப்பட்டிருக்கிறது. தங்கும் செலவினங்கள், அரண்மனை செலவினம், சொந்த பயன்பாட்டிற்கான பொருட்கள், விமானம் மற்றும் போக்குவரத்து செலவினங்கள், உடன் செல்பவர்களுக்கான கருவிகள், ஆடைகள், பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்கான சம்பளம் ஆகிய காரணங்களுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டிருக்கின்றது” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

துன் டாயிம் தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர்களுக்கான மன்றத்தின் ஊடகத் துறை பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த காடிர் ஜாசின் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார்.

காடிர் ஜாசின் தெரிவித்த கருத்துகளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

காடிர் ஜாசினுக்குப் பதிலளித்த அன்வார், அரசாங்கம் அரச தரப்புக்காக ஒதுக்கீடு செய்யும் நிதி குறித்து குறைகூறுவது முறையல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

காடிர் ஜாசின் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து அவர் மீது காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டு, தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண் தெரிவித்திருக்கிறார்.