Home நாடு “முஸ்லீம் அல்லாத இன்னொரு தலைமை வழக்கறிஞரை மாமன்னர் முன்மொழிந்தார்”

“முஸ்லீம் அல்லாத இன்னொரு தலைமை வழக்கறிஞரை மாமன்னர் முன்மொழிந்தார்”

1426
0
SHARE
Ad
மாமன்னரை அண்மையில் அன்வார் சந்தித்தபோது…

கோலாலம்பூர் – மாமன்னர் சுல்தான் மாஹ்முட் V, டோமி தோமஸ் முஸ்லீம் அல்லாதவர் என்பதால் அவரது நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்தார் என்பதில் உண்மையல்ல என்றும் மாறாக, மாமன்னர் வழங்கிய மாற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர்களுக்கான பட்டியலில் இன்னொரு முஸ்லீம் அல்லாத பெயரும் இடம் பெற்றிருந்தது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

ஒரு மூத்த முன்னாள் நீதிபதியான முஸ்லீம் அல்லாத ஒருவரையும் அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட மாமன்னர் முன் மொழிந்தார் என்றும் அன்வார் உறுதிப்படுத்தினார்.

மாமன்னருடனான தனது சந்திப்பின்போது மூன்று முஸ்லீம் வழக்கறிஞர்களையும் அவர் முன்மொழிந்தார் என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நடப்பு கூட்டரசு நீதிபதி டான்ஸ்ரீ அசார் முகமட், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண், மலாயாவுக்கான தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அகமட் மாரோப் ஆகியோர் உள்ளிட்ட சில மூத்த வழக்கறிஞர்களையும் மாமன்னர் முன்மொழிந்தார் என்று ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்தன.

அந்தப் பெயர்களில் ஒருவர்தான் முஸ்லீம் அல்லாத மூத்த முன்னாள் நீதிபதி என அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவேதான், முஸ்லீம் அல்லாதவர் என்ற காரணத்திற்காகத்தான் டோமி தோமசை மாமன்னர் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஆரூடங்களில் உண்மையில்லை என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.