Home உலகம் கிம் ஜோங் சிங்கை வந்தடைந்தார்

கிம் ஜோங் சிங்கை வந்தடைந்தார்

1086
0
SHARE
Ad
கிம் ஜோங் உன்னை வரவேற்கும் லீ சியன் லுங்

சிங்கப்பூர் – அமெரிக்க அதிபருடனான வரலாற்று பூர்வ சந்திப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) சிங்கப்பூர் வந்தடைந்தார்.

அவரை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங் எதிர் கொண்டு வரவேற்றார்.

நாளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் உல்லாச சுற்றுலா மையமான செந்தோசா தீவில் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கிம் ஜோங்கைச் சந்திக்க வாஷிங்டனிலிருந்து தான் புறப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

(படம்: நன்றி – லீ சியன் லுங் டுவிட்டர் பக்கம்)