81 வயதான துங்கு ரசாலி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, “அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் விரும்பினால் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதற்குத் தயாராக இருக்கிறேன்” என அவர் அறிவித்தார்.
கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி இதற்கு முன் 1987-ஆம் ஆண்டில் அப்போதைய அம்னோ தலைவர் துன் மகாதீரை எதிர்த்து அம்னோ தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
எதிர்வரும் ஜூன் 17-ஆம் தேதி அம்னோ தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நிறைவு பெறுகின்றன.
துங்கு ரசாலி போட்டி உறுதியானால், தேர்தல் போட்டிகள் காரணராக அம்னோவில் புதிய எழுச்சியும் உத்வேகமும் ஏற்படும் என்றும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் அனைத்தும் அம்னோ பக்கம் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.