Home உலகம் சிங்கப்பூர் வந்தார் டிரம்ப்

சிங்கப்பூர் வந்தார் டிரம்ப்

1285
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப் – கோப்புப் படம்

சிங்கப்பூர் – (மலேசிய நேரம் நண்பகல் 12 மணி நிலவரம்) அகில உலகமும் ஆவலுடன் அந்த வரலாற்று பூர்வ தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் சில மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தடைந்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடன் நடத்தவிருக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு டிரம்ப் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

“மீண்டும் சிங்கப்பூருக்கு வருவதில் பெருமகிழ்ச்சி. எங்கும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் காற்றில் மிதக்கிறது” என சுமார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நாளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் உல்லாச சுற்றுலா மையமான செந்தோசா தீவில் நடைபெறுவதை முன்னிட்டு வடகொரிய அதிபர் கிம் ஜோங் நேற்று சிங்கை வந்து சேர்ந்து விட்டார்.