Home நாடு காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்

காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்

1096
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீரின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக அடுத்து காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாதீர் பதவியேற்றதிலிருந்து நடப்பு காவல் துறைத் தலைவர் புசி ஹருண் பல வகைகளிலும் அவருடைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பாக இருந்து வருகிறார் என்றாலும், காவல் துறையை முழுமையாக மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல முன்னணி காவல் துறை அதிகாரிகள் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் முக்கியமாக காவல் துறைத் தலைவரும் மாற்றப்படுவார் என்று சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை ஆரூடம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நஜிப் மீது பல வழக்குகள் விசாரணையில் இருப்பதால் அவரால் நியமனம் பெற்ற காவல் துறைத் தலைவர் தொடர்ந்து பதவியில் இருப்பது மகாதீர் அரசாங்கத்திற்கு நெருடலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதே வேளையில் காவல் துறையின் தோற்றத்தை மாற்றும் வகையில் சில இலாகாக்கள் அகற்றப்பட்டுப் புதிய இலாகாக்கள் தோற்றுவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.