Home Video 30 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த ‘விஸ்வரூபம் 2’ முன்னோட்டம்!

30 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த ‘விஸ்வரூபம் 2’ முன்னோட்டம்!

1172
0
SHARE
Ad

சென்னை – 2013-இல் வெளிவந்து கமல்ஹாசனுக்கு சர்ச்சைகளையும், மாபெரும் வெற்றியையும் ஒரு சேர வாரித் தந்த படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று ஜூன் 11-ஆம் தேதி ‘விஸ்வரூபம் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

யூடியூப் தளத்தில் விஸ்ரூபம் 2 – முன்னோட்டம் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து வெற்றி நடை போட்டு வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) பிற்பகலோடு விஸ்வரூபம் 2 முன்னோட்டம் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்படும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

முன்னோட்டத்தை வைத்துப் பார்க்கும்போது படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான கதையம்சமும் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகின்றது.

வழக்கம்போல, கமல்ஹாசனின் இளமைத் துள்ளலுடன் கூடிய – பூஜா குமாருடனான – நெருக்கமான காதல் காட்சிகளும் படத்தின் முக்கிய அம்சங்களாகும்.

விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் நீங்கள் கண்டு களிக்கலாம்:-