Home நாடு நஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்!

நஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்!

1138
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

இணையதளம் ஒன்று நஜிப்பின் இந்த வீட்டை “இரகசிய வீடு” என வர்ணித்திருக்கிறது.

எனினும், அவ்வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் சிறிது நாள்பட்டவை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

“அந்த வீடு ஒரு சேமிப்பு அறை போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே கைப்பைகள், காலணிகள் போன்ற பழைய பொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பொருட்களை விட இவை பழையதாகும்” எனத் தகவல் ஒன்று தெரிவித்திருப்பதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

எனினும், கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை காவல்துறையினர் கணக்கிட்டு வருகின்றனர் என்பதோடு அங்கு வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கின்றனவா என்பதைச் சோதனையிட்டு வருகின்றனர்.
நஜிப்பின் அதிகாரப்பூர்வ வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்த வீட்டில் நேற்று ஜூன் 11-ம் தேதி 1எம்டிபி தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.