Home நாடு பேங்க் நெகாராவின் புதிய ஆளுநர் தேர்வு செய்யப்பட்டார்!

பேங்க் நெகாராவின் புதிய ஆளுநர் தேர்வு செய்யப்பட்டார்!

1150
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பேங்க் நெகாராவிற்குப் புதிய ஆளுநரை, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தேர்வு செய்திருக்கிறது.

எனினும், பேரரசரிடம் அவரது பெயரை முன்மொழிந்து இன்னும் அனுமதி பெறவில்லை என்பதால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.

“பேங்க் நெகாராவின் ஆளுநர் பதவிக்குத் தகுதியான ஒருவரை அரசாங்கம் தேர்வு செய்திருக்கிறது என்பதை பிரதமர் அலுவலகம் அறிவிக்க விரும்புகின்றது. எனினும், அவரின் பெயர் இன்னும் பேரரசரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை” என பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

பேங்க் நெகாராவின் ஆளுநர் டான்ஸ்ரீ முகமட் இப்ராகிம் கடந்த வாரம் பதவி விலகியதையடுத்து, அவரது பதவிக்கு துணை ஆளுநர் டத்தோ நோர் ஷாம்ஷியா முகமட் யூனோஸ் நியமிக்கப்படலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.