Home உலகம் எதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு!

எதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு!

1200
0
SHARE
Ad

சிங்கப்பூர் – அணு ஆயுதப் பரிசோதனைகள் தொடர்பாக ஒருவருக்கொருவர் கடுமையாக வசைபாடிக் கொண்டு, எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், இன்று செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் நடைபெறும் வரலாற்றுப்பூர்வ மாநாட்டில் கலந்து கொண்டு அதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர்.

இச்சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள கேபெல்லா தங்கும்விடுதியில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான நட்புறவு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.