Home நாடு பேங்க் நெகாரா ஆளுநர் பதவி விலகலா?

பேங்க் நெகாரா ஆளுநர் பதவி விலகலா?

937
0
SHARE
Ad
முகமட் இப்ராகிம் – பேங்க நெகாரா ஆளுநர்

கோலாலம்பூர் – பேங்க் நெகாரா எனப்படும் மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் (கவர்னர்) முகமட் இப்ராகிம் பதவி விலக முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இது குறித்து பேங்க் நெகாரா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

டான்ஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிசுக்குப் பதிலாக கடந்த 1 மே 2016-ஆம் நாள் பேங்க் நெகாராவின் 8-வது ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி விவகாரத்தில் செத்தி அக்தார் நடுநிலையோடு நடந்து கொண்டதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என அப்போது ஊடகங்கள் தெரிவித்தன.

அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட முகமட் இப்ராகிம், நஜிப்புக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவராவார். இதற்கிடையில் 1எம்டிபி தொடர்புடைய 2 பில்லியன் மதிப்புள்ள நிலத்தை பேங்க் நெகாரா வாங்கியதைத் தொடர்ந்து அந்த விவகாரமும் ஒரு முறைகேடான பிரச்சனையாக அவரது தலைமையின் கீழ் உருவெடுத்தது.

தற்போது அந்த விவகாரம் ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.