Home நாடு பிடிபிடிஎன் கடன் கட்டத் தவறியவர்கள் கறுப்புப் பட்டியலில் இருந்து அகற்றம்

பிடிபிடிஎன் கடன் கட்டத் தவறியவர்கள் கறுப்புப் பட்டியலில் இருந்து அகற்றம்

1223
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிடிபிடிஎன் எனப்படும் கல்விக் கடன் கட்டத் தவறிய முன்னாள் மாணவர்களில் வெளிநாடு செல்ல முடியாது என குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியலிட்டிருந்த 265,149 பேர் அந்தப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்தார்.

கறுப்புப் பட்டியலில் இருக்கும் மொத்தம் 433,708 பேர்களில் தற்போது 265,149 பேர் அகற்றப்பட்டதாகவும் எஞ்சிய 168,289 பேர் எதிர்வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அகற்றப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகை தந்த பின்னர் மொகிதின் யாசின் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.