Home கலை உலகம் அயுஷ்மான் பவ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீடு விழா!

அயுஷ்மான் பவ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீடு விழா!

909
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய காலத்தில் இசைத்துறையில் பல்வேறு வகையான வித்தியாசமான பாடல்கள் உருவாகி வந்தாலும் கூட, தெய்வீகப்பாடல்களுக்கென ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு இன்னும் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.

காலத்திற்கு ஏற்ற வகையில் இசையில் பல்வேறு புதுமைகளோடு வெளிவரும் தெய்வீகப்பாடல்களை மக்கள் இன்னும் விரும்பிக் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அந்த வகையில், புதுமையான இசையோடு, இளைஞர்களைச் சென்றடையும் வகையில் இந்து சமய தெய்வீகப் பாடல்கள் கொண்ட இசைவட்டினை வெளியிட எண்ணம் கொண்ட பாடகி பிருந்தா ரிஷிக்குமார், ‘அயுஷ்மான் பவா’ என்ற இசைவட்டினை உருவாக்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பாலன்ராஜ், ஜெகதீஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த இசைவட்டில் மொத்தம் 7 தெய்வீகப் பாடல்கள் உள்ளன. அவற்றை பிருந்தா ரிஷிக்குமார் பாடியிருக்கிறார்.

ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்தினம், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணம், மற்றும் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலிய இந்து சமய தெய்வீகப் பாடல்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் புதுமையான இசை அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷிமார்களும் மகான்களும் அருளிய இப்பாடல்களை இளைய தலைமுறையினருக்கு மீண்டும்  நினைவுறுத்தும் நோக்கிலும் அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ள இப்பாடல்கள் வெளியீடு காண உள்ளன.

இந்த இசைவட்டு, வரும் ஜூன் 14-ம் தேதி மிட்வேலியில் நடைபெறவிருக்கும் அஜந்தா சூரியா கம்யூனிகேசன்சின் 16-வது குளோபல் இந்தியன் பெஸ்டிவல் 2018-ல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவிருக்கின்றது.

முற்றிலும் இலவசமாக நடைபெறவிருக்கும் இவ்விழாவில் பொதுமக்கள், இசை ஆர்வாலர்கள், கலைத்துறையினர், பொது இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் திரளாக வந்து இந்த இசைவட்டு வெளியீடு விழாவை சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நிகழ்ச்சி விவரம் பின்வருமாறு:

அஜண்டா சூரியா கம்யூனிகேசன்ஸ் 18-வது குளோபல் இந்தியன் பெஸ்டிவல் 2018

தேதி    : 14 ஜூன் 2018 [வியாழக்கிழமை]

நேரம்    : மாலை மணி 7.30

இடம்    : மிட்வேலி கண்காட்சி மையம், கோலாலம்பூர்

மேல் விவரங்களுக்கு, குறிப்பிட்டுள்ள என்னை அழைக்கவும்: 016 – 207 6117