Home நாடு ஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்ட மகாதீர்!

ஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்ட மகாதீர்!

1067
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முந்தைய ஆட்சியில் இருக்கும் அதிக வட்டியுடைய தேசியக் கடன்களை அடைக்க ஜப்பானிடம் மிகக் குறைந்த வட்டியில் கடன் கேட்டிருக்கிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை நட்பு ரீதியாக அவரது அலுவலகத்தில் சந்தித்த போது, மலேசியாவில் ஜப்பான் பல்கலைக்கழகம் அமைப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்த மகாதீர், குறைந்த வட்டிக் கடனையும் முன்மொழிந்திருக்கிறார்.

மகாதீரின் இந்தக் கோரிக்கையை ஆராய்ந்துவிட்டு பதிலளிப்பதாக ஷின்சோ அபே தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் ஏற்கனவே இருக்கும் தேசியக் கடனில் சில 6 விழுக்காடு வட்டியோடு இருந்து வருகின்றது எனக் குறிப்பிட்டிருக்கும் மகாதீர், தான் பிரதமராகப் பதவி வகித்த போது ஜப்பானிடம் 0.7 விழுக்காடு வட்டியில் கடன்கள் பெற்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது இருக்கும் தேசியக் கடனில் சில, கடன் வாங்கிக் கொடுத்தவருக்கு 10 விழுக்காடு கமிஷனோடு, 6 விழுக்காடு வட்டிக்குப் பெறப்பட்டிருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

உதாரணமாக, 100 மில்லியன் கடனுக்கு 10 விழுக்காடு கமிஷனாக 10 மில்லியன் வழங்கப்பட்டது போக, கிடைக்கும் 90 மில்லியனுக்கு 6 விழுக்காடு வட்டி கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் கமிஷனோடு சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 7 அல்லது 7.5விழுக்காடு வட்டி செலுத்தப்பட்டு வருவதாகவும் மகாதீர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இது போன்ற அதிக வட்டியுடைய தேசியக் கடன்களை அடைக்க ஜப்பானிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்று அடைப்பதே சிறந்த வழி என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.