Home நாடு முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு லேசான பக்கவாதம்!

முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு லேசான பக்கவாதம்!

1273
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்லிஸ் அம்னோ தலைவர் மற்றும் அம்மாநில முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு சில நாட்களுக்கு முன்னர் லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து அம்மாநில அம்னோ செயலாளர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் அபிடின் கூறுகையில், “அவர் படுக்கையில் இல்லை. ஆனால் பக்கவாதம் அவரது செயல்பாடுகளைப் பாதித்திருக்கிறது. அவருக்கு முற்றிலும் ஓய்வு தேவை” எனத் தெரிவித்திருக்கிறார்.

பெர்லிஸ் மந்திரி பெசாராக கடந்த 1995 முதல் 2008-ம் ஆண்டு வரையில் பதவி வகித்த ஷாஹிடன் காசிம் பின்னர் கடந்த மே 9 பொதுத்தேர்தல் வரையில் பிரதமர் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.