Home நாடு தேசிய முன்னணியைக் கலைக்க நேரம் வந்துவிட்டது – நஸ்ரி கருத்து!

தேசிய முன்னணியைக் கலைக்க நேரம் வந்துவிட்டது – நஸ்ரி கருத்து!

1236
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி கூறுகையில், “நல்லவை அனைத்தும் மறைந்துவிட்டதால்” அதிரடியான மாற்றங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“தேசிய முன்னணியைக் கலைப்பது தான் இப்போதைக்கு நல்லது. தீபகற்ப மலேசியாவில் அம்னோ இனி தனியாகப் பயணிக்க வேண்டும்” என்றும் நஸ்ரி கருத்துக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், 14-வது பொதுத்தேர்தலில் மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகளின் படுதோல்வி காரணமாக தேசிய முன்னணி இனி திரும்ப வராது என்றும் நஸ்ரி தெரிவித்திருக்கிறார்.