Home Photo News கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)

2072
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர்   ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான டத்தோ வி.எல்.காந்தன் குடும்பத்தினர் நடத்திய 1008 சங்காபிஷேக வழிபாட்டில் தனது துணைவியாரோடு குலசேகரனும் கலந்து கொண்டார்.

வழக்கறிஞரும், ஹாகாம் எனப்படும் தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசனும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அமைச்சர் குலசேகரனுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்பு நல்கினார்.

அந்தப் படக்  காட்சிகளை இங்கே காணலாம்:

படங்கள்: நன்றி: கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் முகநூல் பக்கம்