Home நாடு துபாயில் சந்திக்க எம்ஏசிசி-க்கு ஜோ லோ அழைப்பு!

துபாயில் சந்திக்க எம்ஏசிசி-க்கு ஜோ லோ அழைப்பு!

969
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி விசாரணையில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் லோ தாயிக் லோ (ஜோ லோ), விசாரணைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளை தனது வழக்கறிஞர்களுடன் துபாயில் வைத்து சந்திக்க ஜோ லோ தயாராகி வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.

இச்சந்திப்பிற்கான நாள் இன்னும் குறிக்கப்படவில்லை என்ற நிலையில், ஜோ லோ சார்பில் நியூயார்க்கைச் சேர்ந்த கோப்ரே & கிம் என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு இவ்விசாரணையில் அவருக்கு துணையாக இருக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதனிடையே, ஜோ லோவின் வழக்கறிஞர்கள், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி துபாயில் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.