Home தேர்தல்-14 4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு!

4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு!

1859
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 3 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தேர்தல் மனுக்களைப் பதிவு செய்திருக்கிறது.

தாசேக் கெலுகோர், ஜெம்போல், தாப்பா மற்றும் பாகான் செராய் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த லூபோ மெராபு மற்றும் சங்காட் ஜோங், ஜோகூரைச் சேர்ந்த காஹாங் சட்டமன்றத் தொகுதிகளிலும் கிடைத்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனுக்களை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.