Home உலகம் இலங்கை: இஸ்லாமியருக்கு இந்து விவகாரத் துறை அமைச்சு

இலங்கை: இஸ்லாமியருக்கு இந்து விவகாரத் துறை அமைச்சு

993
0
SHARE
Ad
காதர் மஸ்தான் – இலங்கை இந்து விவகாரத் துணையமைச்சர்

கொழும்பு – இலங்கையின் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி ஆட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் இஸ்லாமியர் ஒருவருக்கு இந்து விவகாரத் துறை துணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, நாட்டில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையின் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இந்து விவகாரத் துறை துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்க ஓர் இந்து கூட இல்லையா – ஓர் இஸ்லாமியரால் எவ்வாறு இந்து விவகாரப் பிரச்சனைகளை அணுக முடியும் – இந்த முடிவு இந்துக்களைக் கொச்சைப் படுத்துவதுபோல் உள்ளது – என்றெல்லாம் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.