Home உலகம் 2026 உலகக் கிண்ணக் காற்பந்து – கனடா, மெக்சிகோ, அமெரிக்கா நடத்துகின்றன

2026 உலகக் கிண்ணக் காற்பந்து – கனடா, மெக்சிகோ, அமெரிக்கா நடத்துகின்றன

998
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று புதன்கிழமை மாஸ்கோவில் கூடிய பிபா எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (FIFA) எதிர்வரும் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண காற்பந்து போட்டிகளை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து கூட்டாக ஏற்று நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தது.

இந்த 3 நாடுகளும் இணைந்து இப்போட்டிகளை ஏற்று நடத்த கூட்டாக விண்ணப்பித்திருந்தன.

2026-இல் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் மொத்தம் 48 நாடுகளின் குழுக்கள் பங்கேற்கும். தற்போது 32 குழுக்கள் மட்டுமே பங்கேற்கின்றன.

#TamilSchoolmychoice

எந்த நாடு ஏற்று நடத்துவது என்பதற்கான வாக்கெடுப்பில் மொத்தம் 200 வாக்குகள் செலுத்தப்பட்டன. இவற்றில் 134 வாக்குகள் -அல்லது 67 விழுக்காட்டு வாக்குகள் – கனடா, அமெரிக்கா, மெக்சிகோ இணைந்த கூட்டணிக்கு ஆதரவாகக் கிடைத்தன.

போட்டியை ஏற்று நடத்த முன்வந்த மற்றொரு நாடான மொரோக்கோவுக்கு 65 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.