இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் இதுவரையில் விசாரித்து வந்தனர்.
இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் செய்த முடிவு செல்லும் எனத் தீர்ப்பளித்தார்.
அதைத் தொடர்ந்து 2-வது நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவு செல்லாது எனத் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டு நீதிபதிகளும் இரண்டு விதமான முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியிருப்பதால், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முடிவு தொடர்ந்து நடப்பில் இருந்து வரும். அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.
3-வது நீதிபதி வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பை வழங்கிய பின்னரே வழக்கு குறித்த இறுதித் தீர்ப்பு வெளியாகும். அதுவரையில் நடப்பு நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கும்.