Home Video “போராட்டம் தொடர வேண்டும்” – அன்வார் நோன்புப் பெருநாள் காணொளி

“போராட்டம் தொடர வேண்டும்” – அன்வார் நோன்புப் பெருநாள் காணொளி

1306
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு காணொளி வடிவத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு கவிதை வடிவில் அழகாகப் படமாக்கப்பட்டுள்ள அந்தக் காணொளியின் முதல் காட்சி உணவருந்தும் மேசையில் காலியாகக் கிடக்கும் நாற்காலியை அன்வாரின் மனைவி வான் அசிசா ஒருவித சோகம் கலந்த ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் அந்தக் காணொளியில் அன்வார் தனது இல்ல நூலகத்தில் ஒரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் அவரது மகள் “அப்பா நீங்கள் ஓய்வெடுக்கலாமே” என்று கூறுகிறார்.

#TamilSchoolmychoice

“ஓய்வெடுப்பதா? நான் சிறையில் நிறைய ஓய்வெடுத்து விட்டேன். இனி மக்களுக்காக உழைக்க வேண்டும். அவர்கள் நம்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற தொடர்ந்து போராட வேண்டும். ஜனநாயகத்தில் அனைவருக்கும் அவர்களுக்குரிய உரிமைகள், வாய்ப்புகள் கிடைக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்று அன்வார் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து காட்சிகள் விரிகின்றன. அன்வாரின் சில கருத்துகள் சில அண்மையக் காட்சிகள் ஆகியவற்றோடு தொடரும் காணொளி இறுதியில் அன்வார் குடும்பத்தினர் மீண்டும் இணைந்து ஒன்றாக நோன்புப் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதோடும், ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதோடும் முடிவடைகிறது.

உணவருந்திக் கொண்டிருக்கும்போது, அன்வாரின் செல்பேசியில் அழைப்பு ஒன்று வர, தன்னை அழைத்தவரோடு உரையாட செல்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார் அன்வார். அப்போது காலியாகும் அவரது நாற்காலியை வான் அசிசா பார்த்துக் கொண்டிருப்பதோடு காணொளி நிறைவு பெறுகிறது.

அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: