Home உலகம் உலகக் கிண்ணம்: இரஷியா 5 – சவுதி அரேபியா 0

உலகக் கிண்ணம்: இரஷியா 5 – சவுதி அரேபியா 0

868
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இரஷியாவும் சவுதி அரேபியாவும் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 14) மோதிய நிலையில் இரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் 2 கோல்கள் போட்டு இரஷியா முன்னணி வகித்தது.

ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் இரஷியாவின் லுரி கசின்ஸ்கி பந்தை தலையால் முட்டி தனது முதல் கோலை அடித்தார். 2018-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் கோலாகவும் இது திகழ்கின்றது.

#TamilSchoolmychoice

முதல் பாதி ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் முதல் பாதி ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருக்கும் நிலையில் இரஷியாவின் டெனிஸ் செரிஷெவ் இரண்டாவது கோலை அடித்தார்.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னர் இரஷியாவின் விளையாட்டாளர் ஆர்ட்டம் டிஸ்யுபா கோல் அடிக்க இரஷியா தனது 3-வது கோலைப் புகுத்தியது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் – ஆட்டம் முடிய இன்னும் ஓரிரு நிமிடங்களே இருக்கும் நிலையில் – இரஷியாவின் செரிஷெவ் மற்றொரு கோலை அடிக்க 4-0 கோல் எண்ணிக்கையில் இரஷியா தொடர்ந்து முன்னணி வகித்தது.

அதன்பின்னரும் இரஷியாவின் கோல் வெறி  அடங்கவில்லை. ஆட்டம் முடிய இருந்த நிலையில் 90-வது நிமிடத்தில் இரஷியாவுக்குக் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி இரஷிய விளையாட்டாளர் கோல் அடித்தார்.

முழு ஆட்டமும் முடிவடைந்த நிலையில் இரஷியா 5 -0 கோல் எண்ணிக்கையில் சவுதி அரேபியாவை வெற்றி கொண்டுள்ளது.