Home உலகம் உலகக் கிண்ணம்: பெருவை வீழ்த்திய டென்மார்க் (1-0)

உலகக் கிண்ணம்: பெருவை வீழ்த்திய டென்மார்க் (1-0)

984
0
SHARE
Ad

மாஸ்கோ – சனிக்கிழமை (ஜூன் 16) நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் ‘சி’ பிரிவுக்கான மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் தென் அமெரிக்க நாடான பெருவை 1-0 கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் அடிக்காமல் இரண்டு குழுக்களுமே சரி சமமான நிலையில் இருந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் டென்மார்க் விளையாட்டாளர் யூசோப் போல்சன் ஒரு கோல் அடித்து டென்மார்க்கை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

பெரு சிறப்பாக விளையாடினாலும், கோல் எதுவும் அடிக்க முடியாமல் தடுமாறியது. 36 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக பெரு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் பங்கேற்கிறது.