Home நாடு சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் யார்? – இன்னும் இரகசியமாக உள்ளது!

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் யார்? – இன்னும் இரகசியமாக உள்ளது!

904
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் பதவியேற்கவிருக்கிறார்.

எனினும், புதிய மந்திரி பெசார் யார்? என்பது இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

நாளை மந்திரி பெசார் பதவியேற்கவிருக்கிறார் என்றால், இன்று அதற்கான ஒத்திக்கை இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெறுவது வழக்கம் என்பதால், அங்கு செய்தியாளர்கள் பலர் ஒன்று கூடினர்.

#TamilSchoolmychoice

ஆனால், அப்படி எந்த ஒரு ஒத்திகையும் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதேவேளையில், இஸ்தானா புக்கிட் காயாங்கனில், சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை, புதிய மந்திரி பெசார் சந்திப்பார் என எண்ணி சில செய்தியாளர்கள் அங்கும் சென்றனர்.

ஆனால், அங்கு நடப்பு மந்திரி பெசார் அஸ்மின் அலி மட்டுமே காணப்பட்டார்.

புதிய பக்கத்தான் அரசாங்கத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பொருளாதார விவகார அமைச்சராகப் பதவியேற்றிருப்பதால், அவர் மந்திரி பெசார் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி காலியானது. நாளை புதிய மந்திரி பெசார் பதவியேற்பதற்கு முன்பாக அஸ்மின் அலி தனது மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.