Home உலகம் உலகக் கிண்ணம்: குரோஷியா 2-0 கோல்களில் நைஜீரியாவைத் தோற்கடித்தது

உலகக் கிண்ணம்: குரோஷியா 2-0 கோல்களில் நைஜீரியாவைத் தோற்கடித்தது

985
0
SHARE
Ad

மாஸ்கோ – ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் ‘டி’ பிரிவுக்கான ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை குரோஷியா 2-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.

ஆப்பிரிக்க சிங்கங்கள் என அழைக்கப்படும் நைஜீரியாவை  வீழ்ததியதன் மூலம் தனது முதல் ஆட்டத்திலேயே குரோஷியா வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நைஜீரியாவின் ஒகேனகாரோ எட்டிபோ முதல் பாதி ஆட்டத்தில் தவறுதலாக பந்தைத் தங்கள் தரப்பு வலைக்குள்ளேயே அடிக்க குரோஷியா ஆட்டக்காரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அதன் காரணமாக 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்த குரோஷியா இரண்டாவது பாதியில் மற்றொரு  கோலைப் புகுத்தி தனது வெற்றியை 2-0 கோல்களில் நிலை நிறுத்தியது.