Home நாடு டோமி தோமசைச் சந்திக்கிறார் அல்தான்துயாவின் தந்தை!

டோமி தோமசைச் சந்திக்கிறார் அல்தான்துயாவின் தந்தை!

880
0
SHARE
Ad
செடிவ் ஷாரிபு – கோப்புப் படம்

கோலாலம்பூர் – மலேசிய நீதிமன்ற வழக்குகளின் வரலாற்றில் ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் மனங்களில் அழியாத பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இன்று வரை பேசப்படும் வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை வழக்கு.

அந்தக் கொலைவழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மலேசியா வந்திருக்கும் அல்தான்துயாவின் தந்தை செடிவ் ஷாரிபு இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசைச் சந்திக்கிறார்.

தனது மகளில் கொலை வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் – நியாயமாகவும் ஒளிவு மறைவு இன்றியும் மறுவிசாரணை தொடங்க வேண்டும் – என்ற கோரிக்கைகளோடு தனது வழக்கறிஞர் ராம் கர்ப்பாலுடன் டோமி தோமசைச் சந்திக்கிறார் ஷாரிபு.

#TamilSchoolmychoice

காணாமல் போன தனது மகளைத் தேடியும், பின்னர் தனது மகள் கொலையுண்டாள் என்ற கொடூர செய்தி கேட்டு கண்ணீருடனும் பல முறையும் மலேசியா வந்து அலைந்த ஷாரிபு, வழக்கு விசாரணையின் போதும் பல முறை மலேசியா வந்து தனது மகளின் கொலை வழக்கு விசாரணைகளில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.

ஆனாலும், கடந்த ஆட்சியில் ஷாரிபுவின் கோரிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டன.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஷாரிபு டோமி தோமசைச் சந்திப்பதைத் தொடர்ந்து அக்டோரபர் 2006-இல் கொலை செய்யப்பட்ட அல்தான்துயாவின் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்படுமா என்ற ஆர்வம் நாடு முழுமையிலும் எழுந்துள்ளது.