Home நாடு பாரிசானின் டிஎப்டிஇசட் திட்டத்தை இரத்து செய்யாததற்கு நன்றி: நஜிப்

பாரிசானின் டிஎப்டிஇசட் திட்டத்தை இரத்து செய்யாததற்கு நன்றி: நஜிப்

877
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட டிஎப்டிஇசட் ( Digital Free Trade Zone) திட்டத்தை, தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இரத்து செய்யாமல் தொடர்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது நன்றியினைத் தெரிவித்திருக்கிறார்.

“முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் டிஎப்டிஇசட் திட்டத்தை உருவாக்கி, அலிபாபாவுடன் இணைந்து அதிவிரைவாக அறிமுகம் செய்தது. அதனை ஹராப்பான் அரசாங்கம் இரத்து செய்யாமல் தொடர்வதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்” என நஜிப் நேற்று திங்கட்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், டிஎப்டிஇசட் திட்டத்தின் மூலம், வரும் 2025-ம் ஆண்டிற்குள் 65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகப் பொருட்களும், அதனைச் சார்ந்து 60,000 வேலைகள் மற்றும் வசதிகளும் ஏற்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“டிஎப்டிஇசட் போன்ற திட்டங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை. நமது பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் என்பது அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு அங்கம் ஆகும். தற்போது அது 18.2 விழுக்காடு நமது உள்ளூர் தயாரிப்புப் பொருட்களைக் கொண்டிருக்கிறது. 2020-ம் ஆண்டிற்குள் அது 20 விழுக்காடாக வளர்ந்து நமது நாட்டின் ஜிடிபி-க்கு (மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு) பங்களிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.