Home உலகம் குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் மரணம்!

குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் மரணம்!

1076
0
SHARE
Ad

லண்டன் – ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜார்ஜ் (வயது 41) இங்கிலாந்து அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரைப் பந்தயத்தில் கலந்து கொண்ட போது, அவர் சவாரி செய்த குதிரை அவரைத் தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்து மரணமடைந்தார்.

இத்தகவலை ஜெர்மன் அரச குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ்ஜைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜார்ஜ், ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice