கோலாலம்பூர் – தனது மகள் அல்தான்துயா ஷாரிபு படுகொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி, அல்தான்துயாவின் தந்தையான டாக்டர் செடிவ் ஷாரிபு நாளை புதன்கிழமை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சந்திக்கவிருக்கிறார்.
இதனை அல்தான்துயா குடும்பத்தினரின் வழக்கறிஞரான ராம்கர்பால் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ராம்கர்பால் சிங் கூறியிருக்கும் தகவலின் படி, நாளை புதன்கிழமை மாலை 5 மணியளவில் புத்ராஜெயாவில் டாக்டர் செடிவ், மகாதீரைச் சந்தித்துப் பேசுகிறார்.
இதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசையும், டாக்டர் செடிவ் சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.