Home இந்தியா ஏடிஎம் மிஷினில் புகுந்து 12 லட்ச ரூபாயை நாசமாக்கிய எலி!

ஏடிஎம் மிஷினில் புகுந்து 12 லட்ச ரூபாயை நாசமாக்கிய எலி!

1213
0
SHARE
Ad

கவுகாத்தி – அசாம் மாநிலம் கவுகாத்தி டின்சுகியா அருகே ஏடிஎம் இயந்திரம் ஒன்று கடந்த ஒரு மாதமாகப் பளுதாகியிருந்தது.

இந்நிலையில், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்த வங்கி, அதற்கான பளுதுபார்க்கும் ஊழியரை அனுப்பியது.

அந்த ஊழியர் ஏடிஎம் இயந்திரத்தைத் திறந்து பார்த்த போது கடும் அதிர்ச்ப்சியடைந்தார்.

#TamilSchoolmychoice

காரணம், எலி ஒன்று அந்த இயந்திரத்திற்குள் புகுந்து அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500, 2000 ரூபாய் தாள்களைக் கடித்துக் குதறியிருந்தது.

மொத்தம், 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அந்த இயந்திரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் சம்பந்தப்பட்ட வங்கி இழந்த பணம் குறித்து, டின்சுகியா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது.