Home உலகம் மலேசியா பரிசளித்த உலகின் மிக அதிக வயதான ஓராங் ஊத்தான் மரணம்!

மலேசியா பரிசளித்த உலகின் மிக அதிக வயதான ஓராங் ஊத்தான் மரணம்!

1326
0
SHARE
Ad

பெர்த் – உலகின் மிக அதிக வயதான ஓராங் ஊத்தான் புவான், ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்தது.

62 வயதான புவான் என்ற அந்த ஓராங் ஊத்தான் உலகளவில் தனது இனம் பெருகுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

உலகளவில் 10 விழுக்காடு ஓராங் ஊத்தான்கள் புவானின் வழித்தோன்றல்களாகும்.

#TamilSchoolmychoice

11 குட்டிகளோடு, உலகளவில் 54 வழித்தோன்றல்களைக் கொண்டிருக்கும் புவான், வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் பிரச்சினைகளோடுப் போராடிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து, புவான் மருத்துவர்களின் உதவியோடு, கருணைக்கொலை செய்யப்பட்டது.

கடந்த 1956-ம் ஆண்டு, இந்தோனிசியாவின் சுமத்ரா தீவில் பிறந்த புவான், அதன் பின்னர் மலேசியாவில் வளர்ந்தது.

இந்நிலையில், கடந்த 1968-ம் ஆண்டு ஜோகூர் சுல்தானால் ஆஸ்திரேலியாவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.