Home உலகம் உலகக் கிண்ணம்: ஜப்பான் 2 – கொலம்பியா 1 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம்: ஜப்பான் 2 – கொலம்பியா 1 (முழு ஆட்டம்)

803
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் இரவு 9.50 நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) உலகக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிகளின் வரிசையில் முதல் ஆட்டமாக, மலேசிய நேரப்படி இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் ஜப்பானும் கொலம்பியாவும் விளையாடின.

ஜப்பான் ஆசியா கண்டத்தில் வலுவான காற்பந்து குழுவைக் கொண்ட நாடாகும். கொலம்பியாவோ தென் அமெரிக்க காற்பந்து விளையாட்டு பாணியையும், சிறந்த விளையாட்டாளர்களையும் கொண்ட நாடாகும்.

உலகக் கிண்ணம் 2018 – ஜப்பானியக் குழு
உலகக் கிண்ணம் 2018 – கொலம்பியக் குழு

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் கொலம்பிய ஆட்டக்காரர் கார்லோஸ் சாஞ்செஸ் பினால்டி வட்டத்திற்குள் தனது கையால் பந்தைத் தடுத்ததற்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நடுவரால் வெளியேற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கு வழங்கப்பட்ட பினால்டி வாய்ப்பை அதன் விளையாட்டாளர் ககாவா கோலாக்க, ஜப்பான் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.

42-வது நிமிடத்தில் கொலம்பியாவுக்குக் கிடைத்த பிரி கிக்கை அதன் விளையாட்டாளர் கோலாக்க 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டம் சமநிலை கண்டது.

முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற நிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 73-வது நிமிடத்தில் ஜப்பானின் ஒசாகோ பந்தைத் தலையால் முட்டி கோலாக்க ஜப்பான் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் 10 விளையாட்டாளர்களுடன் விளையாடிய கொலம்பியா கோல் ஏதும் அடிக்க முடியாமல் தடுமாறி நிற்க, ஜப்பான் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடியது.