Home நாடு சுனாமி அழித்தது போல் வாழ்க்கை ஆகிவிட்டது: அல்தான்துயா தந்தை

சுனாமி அழித்தது போல் வாழ்க்கை ஆகிவிட்டது: அல்தான்துயா தந்தை

714
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தையான டாக்டர் செடிவ், தனது மகளின் வழக்கை மீண்டும் திறக்கக் கோரி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை இன்று புதன்கிழமை புத்ராஜெயாவில் சந்திக்கிறார்.

இந்நிலையில், நேற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் செடிவ், “நான் கடந்த 12 ஆண்டுகளாகப் பல துன்பங்களை அனுபவித்துவிட்டேன். என் வாழ்க்கை சுனாமி அழித்தது போல் ஆகிவிட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும், முந்தைய அரசாங்கம் இந்த வழக்கின் உண்மைகளை முற்றிலும் மறைத்ததால் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் டாக்டர் செடிவ் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், முந்தைய அரசாங்கத்திடம் தான் பணம் வாங்கியதாகக் கூறப்படுவதையும் டாக்டர் செடிவ் மறுத்தார்.

இந்நிலையில், பிரதமரைச் சந்திக்கவிருப்பது குறித்து பேசிய டாக்டர் செடிவ், “பிரதமர் மகாதீர் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. பிரதமரைச் சந்திக்க இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை” எனத் தெரிவித்தார்.