Home உலகம் (2-1) செர்பியாவைத் தடுத்து நிறுத்திய சுவிட்சர்லாந்து

(2-1) செர்பியாவைத் தடுத்து நிறுத்திய சுவிட்சர்லாந்து

937
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ‘இ’ பிரிவு ஆட்டத்தில், 2-1 கோல் எண்ணிக்கையில் செர்பியாவை வெற்றி கொண்டதன் மூலம் சுவிட்சர்லாந்து 16 நாடுகள் கொண்ட இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.

நேற்றைய மூன்றாவது ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் செர்பியா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே செர்பியாவின் மிட்ரோவிக் முதல் கோலை அடித்துத் தனது நாட்டை முன்னணிக்குக் கொண்டு வந்தாலும், 52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தது. சாக்கா இந்த கோலை அடித்தார்.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நேரத்தில், 90-வது நிமிடத்தில் ஷாக்கிரி இரண்டாவது கோலைப் புகுத்தி சுவிட்சர்லாந்தை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

தனது அடுத்த ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரேசில் குழுவைச் சந்திக்கவிருக்கும் செர்பியா அந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும்.