Home நாடு டான்ஸ்ரீ சுப்ரா மகள் திருமணத்தில் கலந்து கொண்ட மகாதீர்

டான்ஸ்ரீ சுப்ரா மகள் திருமணத்தில் கலந்து கொண்ட மகாதீர்

1495
0
SHARE
Ad
மகாதீருடன் அவரது துணைவியார், புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம்

கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீர் முகமட், தனது நெருக்கடியான அலுவல்களுக்கிடையிலும், தனது பழைய அரசியல் சகாவான டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியத்தின் மகள் டாக்டர் பிரியாவின் திருமணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

டான்ஸ்ரீ சுப்ராவின் மகள் டாக்டர் பிரியாவுக்கும் டாக்டர் சண்முக சிவாவின் மகன் சத்யகுமாருக்கும் இடையிலான திருமணம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) கோலாலம்பூர் சைம் டார்பி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஒரு மருத்துவரான டாக்டர் சண்முக சிவா மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க படைப்பாளரும், விமர்சகருமாவார்.

#TamilSchoolmychoice

மனித வள அமைச்சர் எம்.குலசேகரனும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், உள்ளிட்ட மஇகா தலைவர்கள் பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

1981 முதல் 2003 வரை மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் பல்வேறு அமைச்சுகளில் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் துணையமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.

டான்ஸ்ரீ சுப்ரா 1981 முதல் 2006 வரை மஇகாவின் தேசியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.