Home நாடு “அன்வார் முன்பை விட நலமாக இருக்கிறார்” – வான் அசிசா

“அன்வார் முன்பை விட நலமாக இருக்கிறார்” – வான் அசிசா

815
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – பெட்டாலிங் ஜெயா – மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்பைவிடத் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது துணைவியார் வான் அசிசா தெரிவித்திருக்கிறார்.

அன்வார் நேற்று சனிக்கிழமை இரவு அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தோள்பட்டை வலி, முதுகுத் தண்டு வலி காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது கணவரைச் சந்தித்ததாகவும் வான் அசிசா கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஹரி ராயா பொது விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“அன்வார் நலமடைந்து வருகிறார் என்றாலும் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

அன்வார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் காட்சி

நேற்று சனிக்கிழமை இரவு,  அன்வார் அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டார்.

அன்வார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்த, உடல் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருந்தனர்.

சில முக்கிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதாலும் அன்வாரைச் சந்திப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்குப் பயணம் சென்றிருந்த அன்வார் நாடு திரும்பிய பின்னர் தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுப் பகுதிகளில் ஏற்பட்ட வலி காரணமாக நேற்று மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.