Home நாடு சரவாக்கிலும் கால் பதிக்கிறது பெர்சாத்து கட்சி

சரவாக்கிலும் கால் பதிக்கிறது பெர்சாத்து கட்சி

927
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சரவாக் மாநிலத்திலுள்ள கட்சிகள் தேசிய முன்னணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், பிரிபூமி பெர்சாத்து கட்சி தனது சிறகுகளை சரவாக்கிலும் விரித்து கால் பதிக்கவிருப்பதாக அதன் தலைவர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் கட்சிகளான, ஜசெக, பிகேஆர், அமானா ஆகிய கட்சிகள் சரவாக் மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருப்பதையும், பாஸ் கட்சியும் சரவாக் மாநிலத்தில் கிளைகள் கொண்டிருப்பதையும் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

எனினும் சபா மாநிலத்தில் தாங்கள் கால் பதிக்கப் போவதில்லை என்பதையும் மகாதீர் உறுதிப்படுத்தினார். சபா மாநிலத்தின் வாரிசான் கட்சியின் பக்காத்தான் கூட்டணியோடும் பெர்சாத்து கட்சியோடும் இணைந்து செயல்பட்டு வருவதால் சபா மாநிலத்தில் கிளைகள் அமைக்கும் திட்டம் பெர்சாத்து கட்சிக்கு இல்லை என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.