Home உலகம் உலகக் கிண்ணம்: உருகுவே 3 – இரஷியா 0 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம்: உருகுவே 3 – இரஷியா 0 (முழு ஆட்டம்)

890
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்று திங்கட்கிழமை மலேசிய நேரம் இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

ஒரு ஆட்டத்தில் உருகுவே-இரஷியா நாடுகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில் சவுதி அரேபியாவும் எகிப்தும் களமிறங்கின.

இதில் உருகுவே-இரஷியா ஆட்டத்தில் உருகுவே 3-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. உருகுவேயின் முதல் கோலை சுவாரெஸ் 10-வது நிமிடத்தில் அடிக்க, இரண்டாவது கோல் 23-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. இந்த இரண்டாவது கோல் இரஷியா ஆட்டக்காரர் சொந்தமாக அடித்துக் கொண்ட கோலாகும்.

#TamilSchoolmychoice

மூன்றாவது கோலை கவானி உருகுவேவுக்காக அடித்தார்.

இந்த இரண்டு நாடுகளுமே ‘ஏ’ பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.