Home நாடு மகாதீருக்கு அன்வார் நன்றி

மகாதீருக்கு அன்வார் நன்றி

995
0
SHARE
Ad
அன்வாரைச் சந்தித்த மகாதீர்

பெட்டாலிங் ஜெயா – மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 25) தன்னை வந்து சந்தித்த பிரதமர் துன் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மகாதீரின் வருகையின்போது துணைப் பிரதமரும் அன்வாரின் துணைவியாருமான வான் அசிசாவும் உடனிருந்தார்.

தனக்கிருந்த நெருக்கடியான வேலைப் பளுவுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி தன்னை மருத்துவமனையில் வந்து சந்திக்க பிரதமர் துன் மகாதீர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் காட்டிய அக்கறைக்கும், அன்வார் தனது நன்றியை தனது டுவிட்டர் பக்கத்தின் வழி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனையில் அன்வார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மகாதீர் அவரைச் சந்தித்த புகைப்படத்தையும் தனது டுவிட்டர் தளத்தில் அன்வார் பதிவிட்டுள்ளார்.