Home தேர்தல்-14 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 புதுமுகங்கள்!

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 புதுமுகங்கள்!

1662
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் 14-வது நாடாளுமன்றத் தொடரின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 90 பேர் புதிய முகங்களாவர்.

மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் இத்தனை புதுமுகங்கள் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் ஒரே நேரத்தில் நுழைவது இதுவே முதன் முறையாகும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த 13-வது நாடாளுமன்றத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் 121 பேர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைகின்றனர்.

மேலும் 11 பேர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து சில கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். இத்தகையவர்களில் உதாரணமாக பிரதமர் துன் மகாதீரைச் சொல்லலாம். 2004-ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் 14 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் காலடி வைக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக நுழைபவர்களில் மிக இளம் வயது உறுப்பினர் பத்து நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் ஆவார்.

மிக அதிக வயதான நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்று சொல்லத் தேவையில்லை.

93 வயதான பிரதமர் துன் மகாதீர்தான் அவர்!