மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று நடைபெறும் 4 ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், தென் அமெரிக்க நாடான பெருவும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெறும்.
‘சி’ பிரிவில் இந்த இரு நாடுகளும் இடம் பெற்றுள்ளன. பெரு நாடு இதுவரை எந்தப் புள்ளியும் பெறாமல் கடைசி நிலையில் இந்தப் பிரிவில் பின்தங்கி இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் வென்றாலும் தோற்றாலும் பெரு அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியாது.
ஆஸ்திரேலியா ஒரே ஒரு புள்ளியைப் பெற்று மூன்றாவது நிலையில் இருந்து வருகிறது.
பிரான்ஸ் – டென்மார்க் மோதல்
பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் முதல் நிலையில் இருக்கிறது. இரண்டாவது நிலையில் 4 புள்ளிகளுடன் டென்மார்க் இடம் பெற்றிருக்கிறது.
ஆஸ்திரேலியா-பெரு நாடுகளுக்கிடையிலான ஆட்டம் நடைபெறும் அதே நேரத்தில் ‘சி’ பிரிவின் பிரான்ஸ்-டென்மார்க் இடையிலான குழுக்களின் ஆட்டமும் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டங்களின் முடிவுக்குப் பின்னர் ‘சி’ பிரிவில் தேர்வு பெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லும் குழுக்கள் எதுவென்பது முடிவாகும்.